வயதான ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனைத் திட்டத்தை அனைத்து ஆசிரியர்களுக்கும் விரிவாக்கம் செய்து, சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வயதான ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தால் முதற்கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட 35,600 ஆசிரியர்கள் பயன்பெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.