காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த 3 நாட்களாக சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று காவல்துறை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக, குற்றப்பிண்ணனி உடைய ரவுடிகளின் வீடுகளுக்கும் விசிட் அடிக்கும் காவல்துறையினர், அவர்களின் குடும்ப உருப்பினர்களிடம் எச்சரித்து வருகின்றனர்.