மத்திய பட்ஜெட் சிறப்பாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வறியவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள்
நலனுக்கு முன்னுரிமை தரும் பட்ஜெட் என்று பாராட்டியுள்ள அவர், 2030க்குள் இந்தியா 3ஆவது பொருளாதார நாடாக முன்னேறுவதற்கு இந்த பட்ஜெட் அடித்தளமிட்டுள்ளது என்றார். மேலும் வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.