இங்கிலாந்து ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கான பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஈழத்தமிழ் பெண் உமா குமரன் வென்றுள்ளார். ஸ்ட்ராட்ஃபோர்ட் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் களம் கண்டு 19,145 வாக்குகளை பெற்ற அவர், தன்னை எதிர்த்து நின்ற கிரீன் கட்சியின் ஜோ ஹட்சனை 11,634 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். உமாவின் பெற்றோர் கருப்பு ஜூலை படுகொலைக்குப் பின் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.