வோடாபோன் ஐடியா நிறுவனம் 701 ரூபாய் போஸ்ட் பெய்டு திட்டத்தில் அண்மையில் 50 ரூபாய் உயர்த்தியது. அத்துடன் அந்தத் திட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அளித்த வரம்பற்ற டேட்டாவையும் நீக்கி உள்ளது. தற்போது வரம்பற்ற அழைப்பு, மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ் மற்றும் 150 ஜிபி டேட்டா வழங்குகிறது. அமேசான், ஹாட் ஸ்டார், சோனி லைவ், சன் நெக்ஸ்ட் ஓடிடிகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே தேர்வு செய்யலாம் என்று வோடபோன் அறிவித்துள்ளது.