கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இழப்பீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ₹10 லட்சம் என்பது அதிகம் எனக் கூறிய நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.