2024 ஐபிஎல் சீசனின் வளர்ந்து வரும் வீரர் (EMERGING PLAYER) விருதை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிதிஷ் குமார் ரெட்டி , தனது அப்பா குறித்து உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்காக அப்பா தனது வேலையை இழக்க நேர்ந்ததாகவும், அதனால் குடும்பம் பொருளாதார பிரச்சனைகளை சந்தித்தபோது, பலரும் தந்தையை கேலி செய்ததாகவும் நிதிஷ் கூறியுள்ளார். தனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தபோது, அப்பாவின் தியாகங்களுக்கு பலன் கிடைத்தாக அவர் கூறியுள்ளார்.