குற்றப் பின்னணிகளை கொண்ட அமித்ஷா அமைச்சராக இருப்பது குறித்து அண்ணாமலை வாய் திறப்பாரா? என காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் வினவியுள்ளார். அண்ணாமலை பாட்டி வடை சுட்ட கதையை கூறாமல், ஆருத்ராவுக்கும் பாஜகவுக்கு என்ன தொடர்பு என்பதை கூறுவாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, குண்டர் சட்டத்தில் கைதான செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவராக இருப்பதாக அண்ணாமலை விமர்சித்திருந்தார்.