அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லாஸ் வேகாஸில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே அவருக்கு 3 முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பைடனுக்கு தடுப்பூசி போடப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.