அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கட்சியின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமாக இருந்தாலும், எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்ற உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.