அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு மக்கள் ஆதரவு உள்ளதாக தெரியவந்துள்ளது. ஜூலை 16ஆம் தேதி ராய்ட்டர்ஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டிரம்புக்கு 38% ஆதரவும், ஜனநாயகக் கட்சியின் கமலாவுக்கு 42% ஆதரவும் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சுயேச்சை வேட்பாளர் ராபர்ட் கென்னடிக்கு 8% செல்வாக்கு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.