தற்போது திமுக அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று (ஜூலை 24) வந்த போது வழக்கினை இம்மாத இறுதிக்கு (ஜூலை 31) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.