விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தானை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னதாக, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுவிலும் இடம்பெறவில்லை. இதனால், கட்சியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தநிலையில், மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.