திடீர் உடல்நல குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இடைத்தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமான நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க அறிவாலயம் சென்ற அவர் மயங்கியதாக கூறப்படுகிறது.