ஹைதராபாத்தில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர் அமைப்பினர், மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் வீட்டிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.