மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய-மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், இதுவரை 11 ஆயிரம் FIR-கள் பதிவு செய்யப்பட்டு, 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அங்கு கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சர் பல வாரங்கள் அங்கு தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.