அம்மா உணவகத்தை சிறப்பாக நடத்த முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு காலம் தாழ்ந்தது என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஏழை, எளிய மக்கள் பசியோடு வாடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஜெயலலிதாவால் அம்மா உணவகத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், திமுக அரசு பதவியேற்றதும் அங்கு முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், சப்பாத்தி, வெரைட்டி ரைஸ் நிறுத்தப்பட்டதென்றும் சாடினார்.