தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு காரணமாக 21 பெண்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. புதூர் பாண்டியாபுரத்தில் இயங்கி வரும் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு வெளியேறியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 16 பெண் ஊழியர்கள் என்று 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.