அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்தநாளன்று (ஜூலை 15) தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலை உணவுத் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் சூழலில், இந்தத் திட்டம் தற்போது அரசு உதவி பெறும்
பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.