புதிய மதுபான கொள்கை ஊழல் முறைகேட்டில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து சில மணி நேரங்களில் சிறையில் இருந்து வெளி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் அவரது ஜாமினை நிறுத்தி வைத்துள்ளது. அமலாக்கத் துறையின் மனுவை விசாரிக்கும் வரையில் ஜாமீன் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.