2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளும் என்பது உறுதியாகியிருக்கிறது. 3 சூப்பர் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பதால் இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் (குரூப் 1) முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆகையால், குரூப் 2வில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்தை ஜூன் 27ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இந்தப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும்.