பெரியாரை விட பெரிய பெண்ணியவாதி யாருமில்லை என திமுக எம்.பி கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார். ‘பெரியார் விஷன்’ என்ற ஓடிடி தளத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், பெண்கள் தங்களது லட்சியங்களை அடைவதற்கு எது தடையாக இருந்தாலும் அதனை உடைத்துப் போட வேண்டும் என சொன்னவர் பெரியார் என்றார். அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய முயற்சிகள் மனிதர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என பெரியார் நம்பியதாக தெரிவித்தார்.