மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 1,16,360 அடியை எட்டியுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படலாம். எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல செல்ல வேண்டும் என்றும் மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் 11 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.