மத்திய அமைச்சர் அமித் ஷா கடைந்தெடுத்த ரௌடியைப் போன்றவர் என்று காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “கடத்தல், படுகொலை, பெண்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் அமித் ஷா. அதனால்தான் ‘அமித் ஷா எங்கள் ஊருக்குள் வரக் கூடாது’ என்றெல்லாம் அப்போது மக்கள் எதிர்த்திருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.