தமிழ்நாடு சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் 40 இடங்களில் வனப்பகுதிக்குள் மலையேற்றம் (Trekking) திட்டத்தை ஆகஸ்ட் முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், மலையேற்ற பகுதிகள், கட்டணம் போன்ற தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்திற்காக 400 பழங்குடியினர் & வனத்துறை பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.