கிரெடிட் கார்டுக்கான கட்டண விதிமுறைகளை எச் டி எப் சி வங்கி மாற்றியுள்ளது. அதன்படி Paytm, CRED, Mobikwik போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் வாடகை செலுத்த கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் Utility bills செலுத்தினாலும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் நிரப்ப 15000 ரூபாய்க்கு மேல் பயன்படுத்தினாலும் ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விதிகள் அனைத்தும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகின்றன.