இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இளநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான பதிவு நடைமுறைகள் தொடங்கும் என்றும் கலந்தாய்வு விவரம் மற்றும் அட்டவணை குறித்து மருத்துவ கலந்தாய்வு குழு இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.