அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகியுள்ளது. பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.