தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முதல்வர் ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்துவிட்டு அதன் பிறகு அமெரிக்கா செல்ல இருப்பதாக புது தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க பயணத்திற்கு முன்பு அமைச்சரவை மாற்றத்தை அவர் செய்திருப்பதாக அத்தகவல் தெரிவிக்கிறது.