‘கூழாங்கல்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் தரத்தை இயக்குநர் பிஎஸ்.வினோத்ராஜ் உலகிற்கு நிரூபித்தார். இவர் அடுத்து இயக்கியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் சர்வதேச அளவில் பல பாராட்டுக்களை பெற்றது. சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.