தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய தினம், சிறந்த தேசியவாதியும், தென்னிந்திய மொழிகளில் சிறந்து விளங்கும் கலைஞருமான, ஆக்ஷன் கிங் திரு. அர்ஜுன் அவர்களது மகள், செல்வி. ஐஸ்வர்யா அர்ஜூன் மற்றும், சிறந்த இயக்குனரும், நடிகரும், சமூகப் பொறுப்பு மிக்கவருமான, அண்ணன் திரு. தம்பி ராமையா அவர்களது மகன் செல்வன்.உமாபதி ராமையா ஆகியோரின் திருமண விழாவில், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் திரு. கரு நாகராஜன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி. மணமக்கள் இருவரும், அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று, தங்கள் பெற்றோருக்கு மேலும் பெருமை சேர்த்து, இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழ, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.