உத்தர பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட சடலங்களை கண்ட கான்ஸ்டபிள் ரவி (30) மாரடைப்பால் உயிரிழந்தார். ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்ததாக கிடைத்த தகவலையடுத்து காவலர் ரவி அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற அவர், ஆங்காங்கே சடலங்கள் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்தார்