ஆசிட் வீச்சு தாக்குதல்களுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆசிட் தாக்குதல்கள் பெரும்பாலும் பெண்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படியும், தி வர்மா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஆசிட் வீச்சுகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.