வடகிழக்கு மாநிலம் மேகாலயாவின் உம்காட் நதி ஆசியாவிலேயே தூய்மையான நதியாக கருதப்படுகிறது. இந்த நதியில் பயணிக்கும் படகுகள் காற்றில் மிதப்பது போன்று இருக்குமாம்.உம்காட் நதி ‘டௌகி’ நதி என்றும் அழைக்கப்படுகிறது. டௌகி இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள ஒரு சிறிய நகரம்.
இந்த தூய்மைக்கு காரணம் என்னவென்றால் இங்கு வாழும் பழங்குடி சமூகங்களின் முன்னோர்களிடமிருந்து வரும் பாரம்பரியம் என்றும் நம்பப்படுகிறது.