மாணவர்களின் புகைப்படத்தை (EMIS) பதிவேற்றும் பணியை ஆசிரியர்கள் செய்யத் தேவையில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்களின் அனைத்து தகவல்களையும் EMIS தளத்தில் பதிவிட வேண்டும் என்பதால், ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்து, பாடம் கற்றுத்தர முடியவில்லை என புகார் எழுந்த நிலையில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதும், வேறு பணி செய்யத் தேவையில்லை என கூறியுள்ளார்.