கேரளாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். பயிற்சி பெறும் ஆசிரியர்களின் பாடம் கற்பிக்கும் ஆற்றல் அதிகரிக்குமெனக் கூறிய அவர், இதன் மூலம் மாணவர்களும் AI குறித்து நன்கு அறிந்து கொள்ள முடியும் எனக் கூறியுள்ளார். அத்துடன் இதற்கான பாடங்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.