மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் பிகாரில் ஆல்மாராட்டம் செய்த 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தேர்வில் அந்த மாநிலத்தில் பலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளனர். பயோமெட்ரிக் கருவிகளை ஆய்வு செய்தபோது மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்வு அறையில் பணிபுரிந்த ஒருவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.