திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா இன்று நடைபெற உள்ள நிலையில் இதனை முன்னிட்டு பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கெட் 200 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.