ஆடி கிருத்திகை முன்னிட்டு ஜூலை 29 நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அங்கு நாளை அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.