ஜார்கண்ட் முதல்வர் பதவியை, சம்பாய் சோரன் ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹேமந்த் சோரன், சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான கடிதத்தை, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கிய அவர், ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.