2024 நிதியாண்டில் ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சி கண்டுள்ளதாக, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை, மின்சார வாகன பெருக்கத்திற்கான FAME2 திட்டம், வர்த்தக ACC பேட்டரி சேமிப்பு திட்டம் போன்றவை, இதற்கு முக்கிய காரணியாகும். 49 லட்சம் பயணிகள் வாகனம், 9.9 லட்சம் மூன்று சக்கர வாகனம், 10.7 லட்சம் வணிக வாகனம், 2.14 கோடி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியானதாக ஆய்வறிக்கை கூறுகிறது.