தமிழகத்தில் ஆணவக் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 2018இல் உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டுள்ளதாகக் கூறிய அவர், அவற்றை செயல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.