ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே தீர்வு என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். தனிச்சட்டம் இயற்றினால், குறைந்தபட்சம் ‘இப்படி ஒரு சட்டம் இருக்கிறது, நடவடிக்கை கடுமையாக இருக்கும்’ என்கிற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படும் என்பது ஒரு சாராரின் கருத்து. அதே நேரம் தனிச்சட்டம் என்பது ஒரு அழுத்தத்திற்காக உதவுமே தவிர, ஆணவக்கொலைகளை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியும் எனத் தோன்றவில்லை என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.