உத்தரபிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் கன்குண்டின் கடம்பா பகுதியைச் சேர்ந்த 15 வயதான சந்தன் மாளவியா கடந்த புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூங்கினார். அப்போது நள்ளிரவில், சாந்தனின் பேண்ட்க்குள் புகுந்த பாம்பு அவரது அந்தரங்க உறுப்பில் கடித்துள்ளது. அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தனின் மாமா அருகில் சென்று பாம்பை வெளியே எடுத்து கொன்றார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாந்தனும் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.