ஆதாரில் பிறந்த தேதியை எப்படி மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். இதனை ஆன்லைனில் மாற்ற முடியாது. அருகிலுள்ள ஆதார் மையம், இ சேவை மையம் மற்றும் தபால் நிலையங்களுக்குச் சென்று பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளலாம். பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் பல்கலைக்கழகச் சான்றின் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயோமெட்ரிக் பதிவிட வேண்டும். இதனை சரிபார்த்த பின்னர் பிறந்த தேதி மாற்றப்படும்.