ஆதார் என்பது அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். இந்நிலையில் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை ஆதார் கேந்திரா அலுவலகம் அல்லது இ-சேவை மையத்தில்தான் மாற்ற முடியும். இதற்காக அந்த அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று, அங்கு தரப்படும் படிவத்தில் விவரத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
பின்னர் பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகையை பதிவிட வேண்டும். அதன் பின்னர் திறக்கப்படும் பக்கத்தில், மொபைல் எண் அப்டேட் செய்யப்படும். இதற்காக ரூ.50 கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும்.