ஆதார்-பான் எண்களை இணைக்கும்படி மக்களை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை யார் உதவியும் இல்லாமல் நீங்களே செய்து கொள்ளலாம். இதற்கு https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதளத்துக்கு சென்று, Link Adhaar என குறிப்பிடப்பட்டு இருக்கும் இடத்தை அழுத்தினால், புதிய பக்கம் திறக்கும். அதில் பான், ஆதார் எண்களை உள்ளிட்டால் விவரம் சரியாக இருக்கும்பட்சத்தில் 2 எண்களும் இணைக்கப்படும்.