ஒருவரின் ஆதார் பிறரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறியவும், அதுகுறித்து புகார் அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, யாரேனும் ஒருவருக்கு தனது ஆதாரை பிறர் பயன்படுத்தியுள்ளனரா என்ற சந்தேகம் ஏற்பட்டால், https://myaadhaar .uidai.gov.in/ இணையதளம் சென்று, Login என்ற பகுதியை அழுத்த வேண்டும். அந்த பகுதியில் கேட்கப்படும் ஆதார் எண், கேப்ட்சாவை முதலில் பதிவிட வேண்டும்.
ஆதார் எண், கேப்ட்சாவை உள்ளிட்டதும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனைப் பதிவிட்டதும், Authentication History என்ற பகுதி வரும். அதில் Select Modality பிரிவில் “ALL” என்பதை தேர்வு செய்து, தேதியை தேர்ந்தெடுத்தால், நமது ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது வரிசையாக திரையில் தோன்றும். அதை வைத்து ஆதார் மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து UIDAI தளத்தில் புகார் அளிக்கலாம்.