கள்ளக்குறிச்சியில் கெட்டுப்போன மெத்தனாலை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த மாதேஷ் நல்ல சரக்கு என கூறி சின்னத்துரைக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷச்சாராயம் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை விவரங்கள் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் உள்ள ரசாயன நிறுவனங்களில் இருந்து மெத்தனால் கொண்டுவரப்பட்டுள்ளது சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கும் மெத்தனாலை சின்னதுரை விற்பனை செய்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகி உள்ளது. ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனால் வாங்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது. இரு மாநிலங்களில் உள்ள பல்வேறு சோதனை சாவடிகளை கடந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது மெத்தனால். கெட்டுப்போன மெத்தனாலை பணத்திற்காக கண்ணுக்குட்டி என்பவர் விற்றதே உயிர் இழப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.