ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சந்திக்க சென்ற அவர், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% நிதிப் பற்றாக்குறை உச்சவரம்பை உயர்த்தி ஆந்திராவை மேலும் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார்.